லேபிள்கள்

1.11.15

தேர்வா - தேர்தலா என்பதில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நெருக்கடி

தேர்தல் வருவதால், பாடங்களை விரைவில் முடிக்குமாறு, பள்ளி கல்வித் துறையும்; தேர்வு வருவதால், விரிவாக பாடங்களை நடத்துமாறு, தேர்வுத் துறையும் உத்தரவிட்டு உள்ளதால், ஆசிரியர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.


பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்க, 4 மாதங்களே உள்ளன. இந்த ஆண்டு தேர்வும், தேர்ச்சியும் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மாற்றம்மாணவர்கள் புரிந்து படித்து, சிந்தித்து எழுதுவதை சோதிக்கும் வகையில், வினாத்தாள் தயாரிக்க உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனவே, மாணவர்கள் வழக்கமான, கேள்வி - பதிலை மட்டும் மனப்பாடம் செய்யாமல், பாடங்களை விரிவாக, முழுமையாக படிக்கும் விதமாக, பாடம் நடத்த வேண்டும் என, ஆசிரியர்களுக்கு தேர்வுத் துறைஅறிவுறுத்தி உள்ளது. அதேபோல், 2016 ஏப்ரலில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், ஜனவரியில் இருந்தே ஆசிரியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டி உள்ளது; அதற்கான, பட்டியல் தயாரிக்கப்படுகிறது. எனவே, தேர்தல் பணி இருப்பதால், பாடங்களை சீக்கிரம் முடித்து, 'ரிவிஷன்' துவங்க வேண்டும் என, ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இரண்டு பக்க நெருக்கடிக்கு, அரசு ஆசிரியர்கள்ஆளாகிஉள்ளனர். தேர்வை கவனிப்பதா; தேர்தல் வேலை பார்ப்பதா என, குழப்பம் அடைந்துள்ளனர். 

இதில், தனியார் பள்ளிகளுக்கு, எந்த நெருக்கடியும் இல்லாததால், விடுமுறை கூட விடாமல், பாடங்களை நடத்தி முடித்து விட்டனர். தற்போது, இரண்டாவது முறையாக, பாடங்களை மீண்டும் நடத்துகின்றனர்.

குழப்பம்:
இதுகுறித்து, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

பாடங்களை புரிந்து படிக்கின்றனரா என அறியும் வகையில், கேள்வித்தாள் தயாரிப்பது, வரவேற்கத்தக்கது. அதற்கேற்ப மாணவர்களை தயார் செய்வதில், ஆசிரியர்களுக்கு சிரமம் இல்லை. ஆனால், தேர்தல் பணிக்கு பட்டியல் கேட்டு, ஆசிரியர்களை நச்சரிப்பது தான் கஷ்டமாகஉள்ளது. தேர்தல் வருவது தெரிந்தும், இந்த ஆண்டு ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வை, பள்ளி கல்வித்துறை செயலர், தாமதமாக நடத்தியுள்ளார். 


பணியிட மாறுதல் பெற்ற ஆசிரியர்கள், இப்போது தான் புதிய பள்ளிகளில், பாடம் நடத்த துவங்கி உள்ளனர். இரு மாதங்களுக்கு முன், ஒரு ஆசிரியர்; தற்போது, புதிய ஆசிரியர் என, மாணவர்களும் குழப்பத்தில் உள்ளனர். எனவே, தேர்தல் பணிக்கு, இப்போதே நெருக்கடி தருவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக