தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் இன்று கோவை டவுண் ஹால் ரோட்டில் உள்ள T.E.L.C
நடுநிலை பள்ளியில் காலை 10 மணிக்கு நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில தலைவர் திரு.ஆனந்தகணேஷ் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் திரு. பேட்ரிக் ரெய்மாண்ட் முன்னிலை வகித்து எழுச்சியுரை ஆற்றினார். மாநில துணை பொறுப்பாளர்கள் திரு.முகமது அயூப், திருமதி.ஜேனட் , திரு. திருநாவுக்கரசு, திரு.திருஞானம், திரு. குழந்தைசாமி , திரு. பூசைத்துரை , திரு. ஜான்கென்னடி, திரு.ரமேஷ் குமார், திரு.ஜெகநாதன், திரு.பாண்டியராஜன், திரு.விநாயக மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
மேலும் பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்ய மாநில அரசினை வலியுறுத்தல்.
2. தொடக்க கல்வி துறையில் பணியில் சேர்ந்து பத்தாண்டுகளாக பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவிதிகளை வரையறுக்க கோருதல்
3. நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்தை பதவிஉயர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கி உத்தரவிட வேண்டும் எனவும் அதற்கான அரசாணை உடனடியாக வெளியிட வேண்டும் எனவும் அரசினை வலியுறுத்தல்.
4. முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவிஉயர்வு துறை வேறுபாடு கருதாமல் ஆசிரியர் தேர்வு வாரிய தர எண் அடிப்படையில் வழங்கிட வலியுறுத்தல்.
5. 2004-2006 வரை பணியாற்றிய தொகுப்பூதிய பணிக்காலத்தை பணிவரண்முறை செய்து அதற்கான இழப்பீடு வழங்க அரசினை வலியுறுத்தல்
6. ஜாக்டோ அறிவித்துள்ள டிசம்பர் தொடர் மறியல் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்று போராட்டத்தை வெற்றிகரமாக்கிட முன்னேற்பாடுகள் செய்தல்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக