லேபிள்கள்

4.2.16

அரசு ஊழியர்களின் பென்ஷனுக்காக ரூ.8 ஆயிரத்து 500 கோடி பிடித்தம் : இதுவரை பலன் இல்லை

தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பென்ஷன் வழங்க, ரூ.8,500 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது
என, அரசு தகவல் தொகுப்பு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.இந்தியாவில் அரசு ஊழியர்களின் பென்ஷன் திட்டத்தை நிறுத்திவிட்டு, 1.4.2003 முதல் பணியில் சேருபவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 


இத்திட்டத்தில் பணம் பிடித்தம் செய்யப்பட்டவர்களுக்கு, ஓய்வுக்கு பின்போ அல்லது பணியில் இருந்தபோது மரணமடைந்தோருக்கோ அரசு ஒரு பைசா கூட ஓய்வூதியமாக வழங்கவில்லை. இதனால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப் பட்டு பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.இதையடுத்து டில்லியில் உள்ள ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் சிலர், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டபோது, 'தமிழக அரசு பிடித்தம் செய்த தொகையில் இருந்து, ஒரு பைசாகூட ஆணையத்திடம் செலுத்தவில்லை என்ற தகவல் வெளியானது.

தற்போது திண்டுக்கல்லை சேர்ந்த ஏங்கல்ஸ் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், புதிய ஓய்வூதியதிட்டத்தின்கீழ் இன்றுவரை சேர்ந்துள்ள பணியாளர்களின் எண்ணிக்கை, அவர்களிடம் பிடித்தம் செய்த தொகை, அவர்களுக்காக அரசு செலுத்திய தொகை, அரசு செலுத்திய வட்டி தொகை என, ஐந்து கேள்விகளை கேட்டுள்ளார்.அதற்கு பதில் அளத்த அரசு தகவல் தொகுப்பு மையம், தமிழகஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து, இதுவரை 3 ஆயிரத்து 791 கோடியே 35 லட்சத்து 2 ஆயிரத்து 80 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அதே தொகை அரசு சார்பில் பங்களிப்பு தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகைக்கு ரூ.870 கோடியே 30லட்சத்து, 53 ஆயிரத்து 394 வட்டி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஏங்கல்ஸ் கூறியதாவது: 
இதுவரை தமிழக அரசு சார்பில், 4 லட்சத்து 23 ஆயிரத்து 441 பேரிடம் இருந்து, ரூ.8 ஆயிரத்து 453 கோடியே 0057 ஆயிரத்து 544 ரூபாய் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்கின்றனர். ஆனால், மதுரையை சேர்ந்த ஆசிரியை காமாட்சி என்பவரை தவிர (கோர்ட் மூலம் பணம் பெற்றவர்) வேறு யாரும் பென்ஷன் திட்டத்தில் பலன் பெறவில்லை. பிடித்தம் செய்யப்பட்ட இந்த நிதி எங்குள்ளது? ஊழியர்களுக்கான பென்ஷன் கிடைக்குமா? என்பது குறித்து, தமிழக அரசு வெளிப்படையான வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக