லேபிள்கள்

5.2.16

"ஷிப்ட்' முறையில் பள்ளிக்கு சென்றால் வேறு மாவட்டத்திற்கு மாற்றம்

அரசு பள்ளிகளுக்கு "ஷிப்ட்' முறையில் செல்லும் ஆசிரியர்கள் வேறு மாவட்டத்திற்கு இடம் மாற்றப்படுவர்,''என, கலெக்டர் வெங்கடாசலம் எச்சரித்தார்.
தேனி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தில் அரசு துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், உதவி கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய பயிற்றுனர்களின் பணி திறன் ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் வாசு, கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் ஜெயலட்சுமி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பவுன் முன்னிலை வகித்தனர். கலெக்டர் பேசுகையில்,


"" அரசு பள்ளிகளில் பல மாணவர்களுக்கு பாடத்தை வாசிக்க, எழுத தெரியவில்லை. ஒருசில பள்ளிகளில் மூன்று ஆசிரியர்கள் வேலை செய்தால் நாளுக்கு ஒரு ஆசிரியர் என "ஷிப்ட்' முறையில் பள்ளிக்கு செல்கின்றனர். இத் தவறை செய்யாதீர்கள். கண்டுபிடித்தால் வேறு மாவட்டத்திற்கு மாற்றிவிடுவேன். தனியார் பள்ளிகளில் "ப்ரீகேஜி' மாணவர்களுக்கு தெரியும் ஏ.பி.சி.டி., அரசு பள்ளியில் 6,7,8ம் மாணவருக்கு தெரிவதில்லை. ஆசிரியர்களுக்கு இடையிலான பிரச்னையை மாணவர்கள் மீது திணிக்கக்கூடாது.மார்ச் 1ல் நடக்கும் ஆய்வில் அரசு பள்ளிகளில் எத்தனைமாணவர்கள் வாசிக்க , எழுத தெரிந்தவர்கள். ஆசிரியர் மேற்கொண்ட முயற்சி குறித்து விரிவான அறிக்கை தரவேண்டும். உதவி கல்வி அலுவலர்கள் பள்ளி ஆய்வு செய்தும், அதன் முன்னேற்றத்தை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் எனக்கு தெரிவிக்க வேண்டும்,'' என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக