லேபிள்கள்

12.2.16

தொழிலாளர் நல அலுவலகத்தில் ஆசிரியர்கள் நூதன போராட்டம்

கல்வித் தகுதிக்கு ஏற்ப மாற்றுப்பணி கோரி, குழந்தை தொழிலாளர் திட்ட ஆசிரியர்கள், தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில், காலவரையின்றி காத்திருக்கும்
நுாதன போராட்டத்தை துவக்கி உள்ளனர்.தமிழகத்தில், குழந்தை தொழிலாளர் திட்ட பள்ளிகளில், ஆசிரியர், பள்ளி எழுத்தர்என, 1,254 பேர் பணியாற்றி வருகின்றனர். 


இவர்கள் முறையே, 4,500 ரூபாய், 3,500 ரூபாய் சம்பளம் பெற்று வருகின்றனர்.ஊதியத்தை உயர்த்த வேண்டும்; கல்வித் தகுதிக்கு ஏற்ப மாற்றுப்பணி வழங்க வேண்டும் எனக் கோரி, திட்ட ஆசிரியர்கள், நேற்று, தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.அவர்களுடன், தொழிலாளர் நலத்துறை இணைஆணையர், பேசினார். அவர் எழுத்துப்பூர்வமாக எந்த உறுதியும் அளிக்க மறுத்ததால், திட்ட ஆசிரியர்கள் காலவரையின்றி காத்திருக்கும் நுாதன போராட்டத்தை துவக்கினர்.இது குறித்து, தேசிய குழந்தை தொழிலாளர் பள்ளி ஆசிரியர் சங்க தலைவர் அழகுஜோதி கூறுகையில், ''தொழிலாளர் நலன் காக்கும் துறையில் பணியாற்றும் நாங்கள், குழந்தை தொழிலாளர்களை விட மிக மோசமான நிலையில் உள்ளோம். நல்லசம்பளத்தில் மாற்றுப்பணி என்பதே எங்கள் கோரிக்கை. கோரிக்கையை அரசு ஏற்கும் வரை,இரவு, பகலாக அலுவலகத்திலேயே காத்திருப்போம்;எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக