லேபிள்கள்

20.3.16

4.50 லட்சம் தபால் ஓட்டுகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில், தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள, 4.50 லட்சம் ஊழியர்கள், தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:தமிழகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், 3 லட்சம் பேர்; போலீசார், 75 ஆயிரம் பேர்; டிரைவர்கள், கிளீனர்கள், 75 ஆயிரம் பேர் என, மொத்தம், 4.50 லட்சம் பேர், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட
உள்ளனர்.


அவர்கள் அனைவரும் தபால் ஓட்டு போட, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, அவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண் சேகரிக்கப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களை, பெயர் சேர்க்க விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தபால் ஓட்டு போடுவோர், தபால் ஓட்டு பெற, ஆன்லைனில் விண்ணப்பிக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக