லேபிள்கள்

22.3.16

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு வருமானவரித்துறை ’நோட்டீஸ்’

பனமரத்துப்பட்டி யூனியனில் உள்ள அரசு தொடக்க,நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள்,வருமானவரி கணக்கை தாக்கல் செய்யும்படி, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. சேலம், பனமரத்துப்பட்டி யூனியனில், 50க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், 250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

அரசு பள்ளி ஆசிரியர்கள், 2010-2011 முதல் நான்கு ஆண்டுகளுக்கான வருமானவரி கணக்கை, பத்து நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என, 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் வழங்கி உள்ளது.


இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: சம்பளத்தில்,வருமானவரிக்கான டி.டி.எஸ். பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆடிட்டர் மூலம் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வருமானவரி கணக்கை பைல் செய்து தருவதாக, ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் ஆசிரியர்களிடம் பணம் வசூல் செய்தார். அவர்,சொன்னபடி நான்கு ஆண்டுகளுக்கான கணக்கை பைல் செய்யாமல் விட்டுள்ளார். அதனால், வருமான வரித்துறையில் இருந்து எங்களுக்கு நோட்டீஸ் வந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக