லேபிள்கள்

23.3.16

எஸ்.எஸ்.எல்.சி. ஆங்கிலம் முதல் தாள் தேர்வு எளிமையாக இருந்தது மாணவ–மாணவிகள் கருத்து

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த 15–ந் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொடங்கியது. இந்த தேர்வை
11 லட்சத்து 20 ஆயிரத்து 749 பேர் எழுதி வருகிறார்கள். தமிழ் முதல் தாள், தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடந்து முடிந்துவிட்டது.நேற்று ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடந்தது. தேர்வு எழுதிய மாணவ–மாணவிகள் தேர்வு எளிமையாக இருந்ததாக கருத்து தெரிவித்தனர். இதுகுறித்து மாணவ–மாணவிகள் கூறியதாவது:–


கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்வு, சமீபத்தில் நடந்த மாதிரி தேர்வு ஆகியவற்றில் கேட்கப்பட்டிருந்த வினாக்கள் தான் அதிகளவில் இடம்பெற்றிருந்தன. வெள்ளம் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கற்றல் கையேடு வழங்கப்பட்டது. அதில் இருந்து பெரும்பாலான வினாக்கள் வந்திருந்தன. மொத்தத்தில் நாங்கள் எதிர்பார்த்தது போலவே தேர்வு எளிமையாகவே இருந்தது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

29–ந் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு நடைபெற உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக