லேபிள்கள்

24.3.16

தேர்வு நேரத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால் ஆசிரியர்கள் புலம்பல் !

தேர்வு நேரத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால்
ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர்.பத்தாம் வகுப்பு தேர்வு ஏப்.,13வரை நடக்கிறது. ஆறு முதல்9ம் வகுப்பு களுக்கு ஏப்ரலில் தேர்வு துவங்குகிறது. தேர்வு சமயத்தில் சமூக அறிவியல் பட்டதாரிஆசிரியர்களுக்கு அனை வருக்கும் இடைநிலைக் 
கல்வித்திட்டம் மூலம் மார்ச்18முதல் ஏப்., 6வரை10நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன.


ஆசிரியர்கள் பயிற்சிக்கு செல்வதால் மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும்10ம்வகுப்பு தேர்வு பணி,பயிற்சி என,மாறி,மாறி செல்வதால் மனஉளைச்சல் ஏற்படுவ தாக ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

தமிழ்நாடு வரலாறு ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் பழனி யப்பன் கூறியதாவது:பத்தாம் வகுப்பு தேர்வு நடக்காத நாட்களில் பயிற்சி அளிப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். தேர்வு நாளில் கண்காணிப்பு பணிக்கும்,மற்ற நாட்களில் பயிற்சிக்கு சென்று விடுகிறோம்.இதனால் ஆறு முதல்9ம் வகுப்பு மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த முடியவில்லை. மேலும்10ம் வகுப்பு சமூகஅறிவியல் தேர்வும் ஏப்., 11ல் நடக்கிறது. அவர்களையும் தயார்படுத்த வேண்டியுள்ளது. இதனால் பயிற்சியை நிறுத்த வேண்டும்,என்றார்.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அடுத்த கல்வியாண்டில் நடக்கும் பயிற்சிகளை எவ்வாறு நடத்துவது என்பதை ஆலோசனை நடத்தவே ஆசிரியர்களை அழைத்துள்ளோம். ஒருகுறிப்பிட்ட ஆசிரியர்களை மட்டுமே தேர்வு செய்துள்ளோம். இதனால் தேர்வுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படாது,என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக