லேபிள்கள்

27.3.16

பள்ளி நேரத்தில் கடைக்கு சென்ற மாணவனுக்கு விபத்து: ஆசிரியையிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

பள்ளி நேரத்தில் கடைக்கு சென்ற மாணவனுக்கு விபத்து ஏற்பட்டதில் அவன் காயம் அடைந்தான். இதைதொடர்ந்து மாணவனை கடைக்கு அனுப்பிய
ஆசிரியையிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.மாணவனுக்கு விபத்து

திருப்பூர் அருகே உள்ள இடுவாய் அரசு உயர்நிலைப்பள்ளியில் 9–ம் வகுப்பு படிக்கும் மாணவன் கிருஷ்ணசாமி(வயது14). சம்பவத்தன்று மாணவன் கிருஷ்ணசாமி பள்ளிக்கு சென்றுள்ளான். பள்ளி வகுப்பறைக்கு சென்ற கிருஷ்ணசாமியிடம் ஆசிரியை ஒருவர் அருகில் உள்ள கடைக்கு சென்று டீ வாங்கி வரும்படி கூறியதாக தெரிகிறது.இதையடுத்து மாணவன் கிருஷ்ணசாமி அருகில் உள்ள கடைக்கு சென்று டீ வாங்கி விட்டு பள்ளிக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக அவன் மீது மோதியது. இந்த விபத்தில் மாணவனுக்கு வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியது.ஆசிரியைக்கு நோட்டீஸ்

உடனடியாக அக்கம்பக்கத்தினர் மாணவன் கிருஷ்ணசாமியை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பள்ளி நேரத்தில் மாணவனை ஆசிரியை கடைக்கு அனுப்பிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவனை டீ வாங்க அனுப்பிய சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆசிரியர் தரும் விளக்கத்தை மாவட்ட கல்வி அதிகாரியின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், அதன் பின் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக