தமிழக தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 படிக்கும் போதே, பிளஸ் 2 பாடங்கள் நடத்தி முடிக்கப்படுகின்றன. பின், பிளஸ் 2வில் மீண்டும், ஒருமுறை நடத்தப்படுகிறது. ஆனால், அரசு பள்ளிகளில், பிளஸ் 2 வகுப்பு துவங்கும் போது மட்டுமே, பிளஸ் 2 பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், அரையாண்டு தேர்வுக்கு முன், அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்க, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
இது குறித்து, பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகி இளங்கோ கூறியதாவது: ஏற்கனவே, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், பயிற்சி வகுப்பு நடத்துகின்றனர். அதில் பங்கேற்பதால், ஐந்து நாட்கள் பாடம் நடத்த முடிவதில்லை. பண்டிகை விடுமுறைகள் வருகின்றன; அதை ஈடுகட்டவே திணறும் சூழலில், முன் அரையாண்டு தேர்வு நடத்தினால், உரிய காலத்தில் பாடங்களை முடிக்க இயலாது. இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக