லேபிள்கள்

28.10.16

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, 2 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:நாடு முழுவதும் உள்ள, 50.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 54.24 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு, அவர்களது அடிப்படை சம்பளத்தில், 2 சதவீத அகவிலைப் படி உயர்வு அளிக்க, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆண்டு, ஜூலை, 1ம் தேதி முதல் கணக்கிட்டு, இது அளிக்கப்படும். இதன் மூலம், அரசுக்கு, ஆண்டுக்கு, 5,622 கோடி ரூபாய், கூடுதலாக செலவாகும். இவ்வாறு செய்தியில் கூறப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு மார்ச்சில், அக விலைப்படி, 6 சதவீதம் உயர்த்தப்பட்டு, 125 சதவீதமானது. அதைத் தொடர்ந்து, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரை நடை முறைபடுத்தும்போது, அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படி சேர்க்கப்பட்டது. சர்க்கரை இருப்பு வைப்பதற்கு, வியாபாரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை, அடுத்த ஆண்டு, ஏப்ரல் மாதம் வரை நீட்டிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சர்க்கரையின் விலை உயர்வதை தடுக்க, இந்தக் கட்டுப்பாட்டு முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
பங்கு விற்பனை : 'பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கலாம்' என, மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும், 'நிடி ஆயோக்' அளித்துள்ள பரிந்துரைக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக