கேரளாவில் 10 ஆயிரம் ஆரம்ப பள்ளிகளில் வை-பை வசதி தரும் திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
பள்ளிகளுக்கு வை-பை:
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அங்கு கல்வியை மேம்படுத்த புதிய திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ள அம்மாநில அரசு, முதற்கட்டமாக பள்ளிகளில் வை-பை வசதி, இன்டர்நெட் வசதியை ஏற்படுத்தி தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
நவ., 1ம் தேதி முதல் :
இதன்படி, கேரளாவில் உள்ள 10 ஆயிரம் ஆரம்ப பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளில் வை-பை வசதியை நவ., 1ம் தேதி முதல் பி.எஸ்.என்.எல்., துவங்க உள்ளது. 5 ஆயிரம் உயர்நிலை பள்ளிகளுக்கு பிராட்பேண்ட் வசதி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 8 முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்பறைகள் டிஜிட்டல் மயப்படுத்தப்பட உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக