எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை, கோடை வெயிலில் இருந்து காக்க, முன்கூட்டியே தேர்வு நடத்த வேண்டும்' என, கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டு வரையிலான, நடுநிலை பள்ளிகளில், 220 நாட்கள்; 10 முதல் பிளஸ் 2 வரையிலான, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், 210 நாட்கள், வகுப்புகள் நடைபெறும். அதாவது, நடுநிலை பள்ளிகளுக்கு, ஏப்., 30 வரை; மற்ற மாணவர்களுக்கு, ஏப்., 15 வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இதில், நடுநிலை பள்ளிகள், அதிக நாட்கள் இயங்குவதால், கோடை வெயில் பாதிப்பில், சின்னஞ்சிறு மாணவர்கள் சிக்கி கொள்கின்றனர். இதை தவிர்க்க, நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு, வேலை நாட்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, சென்னை, பரங்கிமலை, ஏ.பி.டி.எம்., நடுநிலை பள்ளி தாளாளர், விக்டர் கிருபாதனம் வெளியிட்ட அறிக்கை:
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச், 31க்குள் தேர்வுகள் முடிகின்றன. ஆனால், ஆறு முதல், 14 வயது வரையிலான, சிறு வயது மாணவர்களுக்கு, ஏப்., 30 வரை பள்ளிகள் நடத்தப்படுகின்றன. அதனால், அவர்கள் தான் வெயிலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், ஏப்., 15க்குள் தேர்வுகளை முடித்து, விடுமுறை அளிக்க வேண்டும். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், இதே முறை கடைபிடிக்கப்படுகிறது. வேலை நாட்களை சரிசெய்ய, காலாண்டு, அரையாண்டு விடுமுறை நாட்களை குறைத்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக