லேபிள்கள்

18.1.17

ஆசிரியர் குறைதீர் கூட்டங்கள்; ’கம்பி நீட்டும்’ ஏ.இ.ஓ.,க்கள்!!!

அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் சேமநல நிதி முன்பணம், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு,
பகுதி இருப்பு முன் பணம் பெறுதல், உயர்கல்வி பயில முன் அனுமதி பெறுதல் உட்பட ஆசிரியர் குறைகள், பணப் பலன் பிரச்னைகளுக்கு தீர்வு காண இக்குறைதீர்க் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.



மாவட்டத்தில் 15 ஏ.இ.ஓ.,க்கள் அலுவலகங்களில் ஒவ்வொரு மாதம் முதல் சனி அன்று இக்குறைதீர் கூட்டம் நடக்கிறது. இதில் பெறப்படும் சில மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காததால், பல மனுக்கள் நிலுவையில் கிடக்கின்றன.

கூட்டம் முடியும் வரை சில ஏ.இ.ஓ.,க்கள் இருந்து மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால் பல அலுவலகங்களில் ஏ.இ.ஓ.,க்கள் பங்கேற்பதில்லை. கிளார்க்குகள் தான் மனுக்களை பெறுகின்றனர். இதனால் ஆசிரியர் பிரச்னை அதிகாரி கவனத்திற்கு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது என ஆசிரியர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்படுகிறது.

தொடக்கக் கல்வி அலுவலர் ராஜாமணி கூறியதாவது:

ஆசிரியர்கள் அளிக்கும் மனுக்கள் மீது 15 நாட்களில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தீர்வு கிடைக்காத ஆசிரியர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் மேல்முறையீடு செய்யலாம். ஜன., ஏப்., ஜூலை மற்றும் ஆகஸ்டில் அதிக மனுக்கள் வருகின்றன.

உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கவனக்குறைவாக செயல்பட்டால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். ஏ.இ.ஓ.,க்கள் தான் கூட்டங்களை நடத்துகின்றனர், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக