லேபிள்கள்

11.8.17

அனுமதியின்றி செயல்படும் பள்ளிகளைத் தடை செய்ய புதிய விதிகள் ரெடி.. ஹைகோர்ட் எச்சரிக்கை

தமிழகத்தில் அனுமதியின்றி செயல்படும் பள்ளிகள் பற்றிய தகவலைக் கேட்டு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதியின்றி செயல்படும் பள்ளிகள் பற்றிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், தமிழகத்தில் அனுமதியின்றி செயல்படும் பள்ளிகள் எத்தனை எனக் கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து தமிழக அரசு வரும் 16-ம் தேதி பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். மேலும், அனுமதியின்றி செயல்படும் பள்ளிகளைத் தடை செய்ய விதிகள் வகுக்க இருப்பதாகவும் நீதிபதி கிருபாகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக