லேபிள்கள்

6.8.17

புதிய பாடத்திட்டத்தில் இடம்பெற உள்ள அம்சங்கள் என்ன? கலைத்திட்ட வடிவமைப்பு குழு தலைவர் எம்.ஆனந்த கிருஷ்ணன் தகவல்

புதிய பாடத்திட்டத்தில் இடம்பெற உள்ள அம்சங்கள் என்ன? என்பது குறித்து கலைத்திட்ட வடிவமைப்பு குழு தலைவர் எம்.ஆனந்த
கிருஷ்ணன் தெரிவித்தார். புதிய பாடத்திட்டம் வடிவமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் கலையரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலைத்திட்ட வடிவமைப்பு குழு தலைவர் எம்.ஆனந்த கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

கூட்டம் முடிந்ததும் கலைத்திட்ட வடிவமைப்பு குழு தலைவர் எம்.ஆனந்த கிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஒரு பாகம், பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மற்றொரு பாகமாக பிரித்து பாடத்திட்டங்கள் தயார் செய்யும் பணி நடைபெறுகிறது. இதில் அடிப்படை மாற்றங்கள் கொண்டுவர வேண்டி இருக்கிறது. எதிர்காலத்தில் எத்தகைய மாற்றங்கள் சமூகத்தில் ஏற்படும் என்பதை எதிர்கால திட்டத்துடன் மாணவர்களுக்கு பாடத்திட்டம் தயாரிக்கப்படுகிறது.

பாடத்திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் நேரடியாகவும் ஆலோசனை கேட்க இருக்கிறோம். இந்த ஆலோசனை கூட்டம் 9-ந்தேதி மதுரையிலும், 11-ந்தேதி கோவையிலும், 22-ந்தேதி சென்னையிலும், 24-ந்தேதி தஞ்சாவூரிலும் நடைபெற இருக்கிறது. இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியை சந்தித்து பேச வேண்டும்.

இதில் பொதுமக்கள் மட்டுமல்லாது மாணவர்களும் கலந்துகொள்ளலாம். அவர்கள் கூறும் கருத்துகளும் ஏற்றுக்கொள்ளப்படும். நாங்களும் சில பள்ளிக்கூடங்களுக்கு நேரடியாக சென்று மாணவர்களிடமும் கருத்து கேட்க இருக்கிறோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக