லேபிள்கள்

4.8.17

11 லட்சம் ஆசிரியர்கள் தகுதி பெற கால அவகாசம் நீட்டிப்பு!! நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட 11 லட்சம் ஆசிரியர்கள் வரும் 2019ம்  ஆண்டிற்குள் குறைந்த பட்ச கல்வி தகுதியை பெற வேண்டும் என
நாடாளுமன்றத்தில் புதிய சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்ட திருத்த மசோதா கடந்த மாதம் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. இது தற்போது ராஜ்யசபாவில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்த இச்சட்டத்தின் மூலம் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் 2015ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் குறைந்தபட்ச கல்வியை தகுதியை பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

தற்போது இந்த காலக்கெடு 2019ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு ஏற்பட்டுள்ளது.

''இச்சட்டம் அமல்படுத்தப்பட்டபோது தகுதியான ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இதனால் பட்டம் மட்டுமே பயின்றவர்கள் ஆசிரியர்கள் மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டனர். இதன் மூலம் தற்போது தனியார் பள்ளிகளில் 7 லட்சம் தகுதியற்ற ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். 2.5 லட்சம் பேர் அரசுப் பள்ளிகளில் பயில்கின்றனர்'' என்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில், ''1.5 லட்சம் ஆசிரியர்கள் ஓராண்டு பயிற்சியை முடித்துள்ளனர். இதன் மூலம் 11 லட்சம் ஆசிரியர்கள் தற்போது தகுதி பெறாமல் பணியாற்றி வருகின்றனர். அதனால் இந்த ஆசிரியர்கள் பி.எட் மற்றும் இதர தொழில் முறை பட்டங்களை நிறைவு செய்ய வேண்டும்'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக