ஆக.,6ம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நடத்தும் குரூப் 2 ஏ தேர்வை புறக்கணிப்பது என வருவாய்த்துறை அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர்.
மதுரையில் இது குறித்து சங்க மாநில பொது செயலாளர் பார்த்திபன் கூறியதாவது:புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். எட்டாவது சம்பள மாற்றத்தை தாமதமின்றி வழங்கிட வேண்டும். இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் சென்னை யில் ஆக., 5ம் தேதி பேரணி நடக்கிறது. இதில் வருவாய்த்துறை அலுவலர்கள் முழுமையாக பங்கேற்கின்றனர். இந்நிலையில் ஆக., 6ம் தேதி நடக்கும் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என அரசை வருவாய் அலுவலர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். ஆக.,5ம் தேதி சென்னை பேரணியில் பங்கேற்று விட்டு அலுவலர்கள் மறுநாள் தேர்வாணைய தேர்வு பணிகளை பார்ப்பது கடினம். எனவே தேர்வை வேறு தேதியில் நடத்த வேண்டும். தவறினால் தேர்வாணையத் தேர்வுகளை வருவாய் அலு
வலர்கள் புறக்கணிப்பர், என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக