அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒத்துழைப்பு இல்லாததால் பணிப்பதிவேட்டை 'டிஜிட்டல்' மயமாக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்பணியை விரைந்து முடிக்குமாறு, கலெக்டர்களை கருவூல
கணக்குத்துறை அறிவுறுத்தியுள்ளது.கருவூலகங்களில் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் 'டிஜிட்டல்'மயமாக்கும் பணி ஆறு மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது.
இதில் பணிப்பதிவேட்டின் பக்கங்கள் 'ஸ்கேன்' செய்யப்பட்டு கணினியில் ஏற்றப்பட்டு வருகின்றன. கணினியில் ஏற்றியவுடன் 'பிரின்ட்' எடுத்துசம்பந்தப்பட்ட ஊழியருக்கு வழங்கப்படும். அதில் ஏதேனும் பதிவு விடுதல் இருந்தால், அவற்றை வரைவு அலுவலர் மூலம் சரிசெய்து மீண்டும் ஒப்படைக்க வேண்டும். பலரது பணிப்பதிவேட்டில் ஊக்க ஊதியம், விடுப்புகள் போன்ற பதிவுகள் கூட விடுபட்டுள்ளன. இதனால் அவற்றை சரி செய்து தர, சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் கருவூலகத் துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.ஆனால் விடுபட்ட பதிவு களை சரிசெய்து கொடுக்காமல், ஊழியர்கள் தாமதப்படுத்தி வருகின்றனர். சில துறைகளில்பதிவுகளை சரிசெய்து கொடுக்க, வரைவு அலுவலர்கள் மறுத்து வருகின்றனர்.
இதனால் 'டிஜிட்டல்'மயமாக்கும் பணி தொய்வுஅடைந்துள்ளது.இதையடுத்து ஒத்துழைப்பு தராத துறை அலுவலர்களுக்கு, தக்க அறிவுரை வழங்குமாறு, கலெக்டர்களை கருவூலக கணக்குத் துறை அறிவுறுத்தியுள்ளது.மேலும், ஆறு மாதங்களுக்குள் ஓய்வுபெறும் நிலையில் உள்ள ஊழியர்களின் பணிப்பதிவேட்டை 'டிஜிட்டல்' செய்ய வேண்டாமெனவும் தெரிவித்துள்ளது.
கருவூலக கணக்குத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாவட்டம்தோறும் கருவூலகங்களில் 'டிஜிட்டல்'மயமாக்கும் பணி நடக்கிறது. இதனை செப்டம்பருக்குள் முடிக்க அரசு உத்தரவிட்டுஉள்ளது. அதன்பின் சென்னை தலைமையகத்தில் தான் பணிப்பதிவேட்டை 'டிஜிட்டல்'மயமாக்க முடியும். ஆனால் பலமுறை வலியுறுத்தி யும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒத்துழைக்க மறுக்கின்றனர் என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக