'வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை முதல் மூன்று நாட்களுக்கு, கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில், ஒரு வாரம் வெயில் வாட்டிய நிலையில், மூன்று நாட்களாக, பரவலாக மழை பெய்கிறது. நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தில், அதிகபட்சமாக, 15 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.நேற்று, சென்னை நகரில் பரவலாக மழை பெய்ததில், மாலை வரை, 1.5 செ.மீ., பதிவானது. மாலை, பல இடங்களில், லேசான மழை தொடர்ந்தது. இந்த மழை தொடரும் என, அறிவிக்கப் பட்டுள்ளது.
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில், ''வங்கக்கடலில், மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால், வரும் மூன்று நாட்களுக்கு, லேசானது முதல் கனமான மழை பெய்யும். 4, 5ம் தேதிகளில், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர பகுதிகளில், பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது,'' என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக