நாகப்பட்டினம்:அரசு பணியாளர் சங்கம் சார்பில், ஆக., 4ல் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன், நாகையில் அளித்த பேட்டி:
அரசு ஊழியர்களுக்கு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வூதியம் பெறாத அரசு பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.தமிழக அரசு, அனைத்து துறைகளிலும், நிரந்தர பணியாளர்களை தவிர்த்து, தனியார் ஏஜன்சிகள் மூலம், 50 ஆயிரம் ஊழியர்களை பணியமர்த்தி, அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகளாக, ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பதால், அவர்கள் முறைகேட்டில் ஈடுபட, அரசே வழி வகுத்துக் கொடுத்துள்ளது.போராட்ட குணம் படைத்த அரசு பணியாளர் சங்கத்தை, 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பில் உள்ள சிலர் புறக்கணித்து வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபடும் அனைத்து சங்கத்தினரையும், அரசு பேச்சுக்கு அழைத்து, கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும். 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 4ம் தேதி, சென்னையில் அரசு பணியாளர் சங்கத்தின் சார்பில், உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. அதன்பின், ஜியோ தவிர்த்து, ஜாக்டோ அமைப்புடன் பேச்சு நடத்தி, ஜாக்டோவுடன் இணைந்து போராட்டம் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக