சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், இன்று துவங்குகிறது. தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி படிப்புகளுக்கு, ஆறு அரசு மருத்துவ கல்லுாரிகள் உள்ளன.
இதில், 396 இடங்களும், 22 சுயநிதி கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டிற்கு, 859 இடங்களும் உள்ளன. அத்துடன், சுயநிதி கல்லுாரிகளின் நிர்வாக இடங்களுக்கும், இந்தாண்டு அரசே மாணவர் சேர்க்கையை நடத்துகிறது.இதற்கான விண்ணப்ப வினியோகம் இன்று துவங்குகிறது.
சென்னை, பாளையங்கோட்டை, மதுரை, நாகர்கோவில் ஆகிய இடங்களில் உள்ள, ஆறு இந்திய மருத்துவ முறை அரசு மருத்துவ கல்லுாரிகளில், வரும், 30ம் தேதி வரை, விண்ணப்பங்கள் கிடைக்கும். மேலும், www.tnhealth.orgஎன்ற, இணையதளத்திலும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும், ௩௧க்குள், சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும்.
இதுகுறித்து, மாணவர் சேர்க்கை செயலர், ரவிசெல்வன் கூறுகையில், ''இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு, இந்த ஆண்டு, அதிகம் பேர் போட்டியிட வாய்ப்பு உள்ளது. அதனால், 6,000 விண்ணப்பங்கள் தயார் நிலையில் உள்ளளன. ஆயுஷ் துறை அனுமதியை பொறுத்து, கல்லுாரிகளில், மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் இறுதி செய்யப்படும்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக