மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., 2017, ஏப்ரலில், ஒரு சுற்றறிக்கை வௌியிட்டது. அதில், 'சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அனைத்தும், என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை மட்டுமே,
மாணவர்களுக்கு வாங்க வேண்டும்' என, கூறப்பட்டது. இந்த சுற்றறிக்கையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்கம் மனு தாக்கல் செய்தது.மனுவை விசாரித்த, நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த, இடைக்கால உத்தரவு:இந்த சங்கத்தில், சி.பி.எஸ்.இ., அமைப்பில் இணைந்துள்ள, ௨௮௭ பள்ளிகள் உறுப்பினர்களாக உள்ளன். 2017, ஏப்ரலில் பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கை, 2014, பிப்ரவரியில் பிறப்பித்த சுற்றறிக்கைக்கு முரணாக உள்ளது. புத்தகங்களின் தரம், அடக்கம் பற்றி சரிபார்க்காமல், தனியார் நிறுவனங்களின் புத்தகங்களை வாங்குவதற்கு அனுமதித்த, சி.பி.எஸ்.இ., நிர்வாகத்தை தான் குறை கூற வேண்டும். என்.சி.இ.ஆர்.டி., மற்றும் தனியார் நிறுவனங்களின் புத்தகங்களை, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் வாங்க, 2014ல் பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கை அனுமதி அளிக்கிறது. தற்போது பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையில், விரிவான விபரங்கள் இல்லை. எனவே, அந்த சுற்றறிக்கைக்கு தடை விதிக்கப்படுகிறது. 287 பள்ளிகள் கொண்ட சங்கம், ஒரே மனுவை தாக்கல் செய்ததன் மூலம், அதன் உறுப்பினர் பள்ளிகள் அனைத்தும் பலன் பெறுகின்றன.சங்கத்தின் சார்பில் மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டதால், அதன் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், தலா, 1,000 ரூபாய் என, மொத்தம், 2.87 லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். தவறினால், நீதிமன்றம் தகுந்த உத்தரவை பிறப்பிக்கும். மனுவுக்கு, சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்க, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்படுகிறது. விசாரணை, ஆக.,4க்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக