'தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு, நல வாரியம் மூலம் வழங்கப்படும் கல்வி உதவித் தொகைக்கு, அக்., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தொழிலாளர் நல வாரியம் அறிவித்
துள்ளது.
துள்ளது.
இதுதொடர்பாக வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் உள்ள, தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு, பல்வேறு பிரிவு களில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில், பிளஸ் 1 முதல், முதுகலை பட்டப் படிப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, பாடநுால் உதவி, மேல்நிலைக் கல்வி படிப்பவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், கல்வி மாவட்ட அளவில், அதிக மதிப்பெண்கள் பெற்ற, 10 மாணவர்களுக்கு ஊக்கத் தொகை; மருத்துவம், இன்ஜினியரிங், சட்டம், விவசாயம், ஆசிரியர் பயிற்சி மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் படிப்பு
களுக்கு, கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை பெற, அக்டோபர், 31க்குள், விண்ணப்பிக்க வேண்டும்
மேலும் விபரங்களுக்கு, 'செயலர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், த.பெ.எண்.718, தேனாம்பேட்டை' என்ற முகவரி; 044- - 2432 1542 என்ற தொலைபேசி எண் மற்றும், www.labour.tn.gov.in என்ற, இணைய தள முகவரி ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு தொழிலாளர் நல வாரியம்
அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக