லேபிள்கள்

9.8.17

புதிய பாடத் திட்டம் குழு : மதுரையில் இன்று கருத்துகேட்பு

பள்ளி கல்வியில் புதிய பாடத்திட்டம் தயாரிப்புக்கான கருத்து கேட்புக் கூட்டம் மதுரையில் இன்று (ஆக.,9) நடக்கிறது.
தமிழக பள்ளிகளில் பாடத்திட்டம் பல ஆண்டுகளாக மாற்றப்படவில்லை. துறை செயலராக உதயசந்திரன் பொறுப்பேற்ற பின் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு இணையாக, அகில இந்திய நுழைவு தேர்வுகளை சமாளிக்கும் வகையில், புதிய பாடத்திட்டங்களை வடிவமைக்கும் பணி துவங்கி உள்ளது. 

இதற்காக சென்னை அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் பாடத்திட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர், ஆசிரியர், பெற்றோர், கல்வியாளர்களிடம் இதுகுறித்து குழு ஆலோசனை நடத்தி வருகிறது.இதன் முதல் கூட்டம் சென்னையில் கடந்த மாதம் நடந்தது. 

அடுத்ததாக, மதுரை காளவாசலில் உள்ள தர்பார் ஓட்டலில் இன்று (ஆக.௯) நடக்கிறது. இதில் அனந்தகிருஷ்ணன், எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் அறிவொளி உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் கல்வி நிறுவனங்கள், அமைப்புகள், கல்வியாளர்கள், பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் கருத்து தெரிவிக்கலாம். இதற்கான ஏற்பாடுகளை முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக