அரசு மருத்துவ கல்லுாரிகளில், டிப்ளமா நர்சிங் படிப்பில் சேர, இம்மாதம், 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்ட செய்தி குறிப்பு: தமிழகத்தில், 23 அரசு மருத்துவ கல்லுாரிகளில், டிப்ளமா நர்சிங் படிப்புக்கு, 2,000 இடங்கள் உள்ளன.
இந்த படிப்புகளில் சேர, www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில், விண்ணப்பங்கள் பதிவிறக்கம் நேற்று துவங்கியது. வரும், 21ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்.மருத்துவ கல்லுாரிகளிலும் விண்ணப்பத்தை பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும், 23ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், மருத்துவ தேர்வு குழுவுக்கு கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். தர வரிசை பட்டியல், நவ., முதல் வாரத்தில் வெளியிடப்பட்டு, இரண்டாம் வாரத்தில் கவுன்சிலிங் நடைபெறும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக