:''வெளி மாநிலங்களில் செயல்படும் தொலை துார கல்வி நிலையங்கள் மூடப்படும்,'' என, பாரதியார் பல்கலை துணைவேந்தர், கணபதி கூறினார்.ஊட்டியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மத்திய அரசின், 'இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ்' சார்பில், சிறந்த முறையில் செயல்படும் பல்கலைகளுக்கு, நிதியுதவி வழங்கப்பட உள்ளது; தமிழகத்தில், நிதியுதவி பெறும் தகுதியை, பாரதியார் பல்கலை பெற்றுள்ளது.
அந்நிறுவனத்தில், பதிவுக் கட்டணமாக மட்டும், ஒரு கோடி ரூபாய் செலுத்த வேண்டும்.
அந்நிறுவனம், பாரதியார் பல்கலையை தேர்வு செய்து விட்டால், ஆண்டுக்கு, 200 கோடி ரூபாய் வீதம், ஐந்தாண்டுக்கு, 1,000 கோடி ரூபாய் வழங்கும்.
இதன் மூலம், உள் கட்டமைப்புகள், ஆய்வுக் கூடங்கள் மேம்படுத்தலாம். வெளிநாடுகளில் இருந்து நிபுணத்துவம் பெற்ற கல்வியாளர்களை வரவழைத்து, கல்வி போதிக்க செய்யலாம்; இங்குள்ள கல்லுாரி ஆசிரியர்கள், வெளிநாடுகளுக்கு சென்று, சிறப்பு பயிற்சி பெற்று வரலாம்.
பல்கலையில், 150 கோடி ரூபாய் அளவுக்கு, பென்ஷன் நிதி ஏற்படுத்தப்பட்டுள்ளது; எதிர்
காலத்தில் பென்ஷன் பண பலன் சார்ந்த பிரச்னை இருக்காது. 2015 வரை, பல்கலை மானியக் குழுவின் அங்கீகாரத்துடன் தான், தொலை துார கல்வியை நடத்தி வந்து உள்ளோம்.
இருப்பினும், உயர்கல்வி துறை அமைச்சரின் ஆலோசனைப்படி, வெளி மாநிலங்களில் செயல்படும், 310 தொலை துார கல்வி நிலையங்களை மூடவுள்ளோம். தமிழகத்திற்குள் செயல்படும், 150 தொலை துார கல்வி நிலையங்கள், வழக்கம் போல் செயல்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக