'தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர்களை சேர்ப்பது குறித்த விதிகளை வகுக்க, வரும், 15ல் கூட்டம் நடத்தப்படும்' என, உயர்கல்வித் துறை முதன்மை செயலர், சுனில்
பாலிவால்அறிவித்துள்ளார்.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 500க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகள், பி.ஆர்க்., மற்றும் மேலாண் படிப்பு கல்லுாரிகளில், மாணவர்களை சேர்க்க, தமிழக அரசுசார்பில், ஒற்றை சாளர கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.இந்த ஆண்டு, 'ஆன் லைன்' முறையில் கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது.இதில், சிறுபான்மை கல்லுாரிகளில், 50 சதவீத இடங்களும், மற்ற தனியார் கல்லுாரிகளில், 65 சதவீத இடங்களும், அரசின் கவுன்சிலிங்குக்கு ஒதுக்கப்படும்.அது போக, மீதமுள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, மாணவர்கள் சேர்க்கையை எப்படி நடத்த வேண்டும்; நன்கொடை வசூலிக்க விதிகள் உள்ளதா; மாணவர்களுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது குறித்து, தனியாக விதிகள் வகுக்கப்பட உள்ளன.இதற்காக, 'வரும், 15ல், தனியார் கல்லுாரிகளின் நிர்வாகிகள், அண்ணா பல்கலையின் இணைப்பு குழு அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரக அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம், சென்னையில் நடத்தப்படும்' என, உயர் கல்வித் துறை முதன்மை செயலர், சுனில் பாலிவால் அறிவித்துள்ளார்.இதில், வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கான விதிகள் தொடர்பாக, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக