நடப்பு கல்வியாண்டுக்கான பருவத்தேர்வுகள் துவங்கியுள்ள நிலையில், 200 கவுரவ விரிவுரையாளர்களை, அரசு கல்லுாரிகளில் விதிமுறைகள் மீறி நியமிக்கப்படுவதாக, புகார் எழுந்துஉள்ளது.
மாநிலத்தில், 91 அரசு கலை அறிவியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இக்கல்லுாரிகளில், நேற்றைய நிலவரப்படி, 2,300 பேராசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. தேவைப்படும் சமயங்களில் பணிநியமனம் செய்யாமல், பருவத்தேர்வுகள் துவங்கியுள்ள நிலையில், அவசர கதியில், 200 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்ட, தகுதியானவர்களின் இறுதிபட்டியலை நிராகரித்து விட்டு, மேலிடத்தில் இருந்து அனுப்பப்படும் பட்டியல் படி, ஆட்களை பணி நியமனம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது கல்லுாரி முதல்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு கல்லுாரி பேராசிரியர் சங்க மாநில தலைவர் வீரமணி கூறியதாவது:பருவத்தேர்வுகளுக்கான செய்முறை தேர்வுகள் துவங்கியுள்ள நிலையில், அவசர கதியில் கவுரவ விரிவுரையாளர்களை பணி நியமனம் செய்வது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேர்காணல் முறையில் தேர்வு செய்ய, கல்லுாரி கல்வி இயக்குனரால் அறிவுறுத்தப்பட்டது.ஆனால், தற்போது கல்லுாரி முதல்வரால் தேர்வு செய்யப்பட்ட பட்டியலை நிறுத்திவிட்டு, இயக்குனர் தரப்பில் தரும் பட்டியலின் படி, ஆட்களை நியமிக்க கல்லுாரி முதல்வர்களை மிரட்டி வருவது கண்டனத்திற்குரியது. இதில், முறைகேடுகள் அரங்கேறியுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக