மத்திய பணியாளர் தேர்வு வாரியமான, எஸ்.எஸ்.சி., நடத்திய தேர்வின் வினாத்தாள் வெளியானது குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள,
பல்வேறு துணை நிலை காலி பணியிடங்களுக்கு, எஸ்.எஸ்.சி., சார்பில், சமீபத்தில் தேர்வு நடத்தப்பட்டது. இதில், தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக, தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் புகார் அளித்தனர்.இதுகுறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, டில்லியில் உள்ள, எஸ்.எஸ்.சி., அலுவலகம் முன், ஆயிரக்கணக்கான விண்ணப்பதா ரர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், வினாத் தாள் வெளியானது குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ராஜ்நாத் சிங் நேற்று தெரிவித்தார். போராட்டம் நடத்துவோர், அதை கைவிடும்படியும், அவர் வலியுறுத்தினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக