பிளஸ் 1 பொதுத் தேர்வில் கலைப்பிரிவு மாணவர்களுக்கு பிரதான தேர்வுகளில் முதலாவதாக வணிகவியல் தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து தேர்வெழுதிய மாணவர்கள் கூறும்போது, "மொழிப்பாடங்களுக்குப் பிறகு வணிகவியல் பாடம்தான் எப்போதும் எளிதாக இருக்கும். நாங்கள் எதிர்பார்த்தது போன்றே பொதுத்தேர்விலும் வணிகவியல் வினாத்தாள் எளிதாகவே இருந்தது. குறிப்பாக ஒரு மதிப்பெண் வினாக்கள் பாடத்திலிருந்தே இடம்பெற்றிருந்ததால் உடனடியாக பதிலளிக்க முடிந்தது. ஐந்து மதிப்பெண் பகுதியில் அனைத்துப் பாடங்களிலிருந்தும் வினாக்கள் இடம் பெற்றிருந்தன. இதனால் வணிகவியலில் 90 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது' என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக