லேபிள்கள்

19.3.18

புது கல்லூரிகள் அனுமதிக்கு தடை

தமிழகத்தில், 700 கல்லுாரிகள் உட்பட, நாடு முழுவதும், 8,000 ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ளது.
மேலும், புதிய கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவுகளுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக, விண்ணப்பங்களை பெற்று பரிசீலித்து வருகிறது.இந்நிலையில், '2019 - 20ம் கல்வி ஆண்டில், புதிய கல்லுாரிகள் துவங்கவும், எந்த கல்லுாரியில் இருந்தும், புதிய பாடப்பிரிவுகளை துவக்கவும், விண்ணப்பங்கள் பெறப்படாது' என, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் கூறியுள்ளது.தற்போது, அங்கீகாரம் அளித்து இயங்கும் கல்வி நிறுவனங்களை முறைப்படுத்தவும், கல்வித்தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை மேற்கொள்வதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக