தமிழக உயர்கல்வித்துறையில் முறைகேடுகளை முடிவுக்கு கொண்டு வரவும், நிதி இழப்புகளை தவிர்க்கவும், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முறைகேடு புகாரின் எதிரொலியாக, கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தராக இருந்த கணபதி, பணி நியமனத்துக்கு பேரம் பேசியதாக, கையும் களவுமாக பிடிபட்டார்.இதை தொடர்ந்து, உயர்கல்வித்துறையின் ஊழல் பிரச்னைகள் பூதாகரமாக வெடித்தன. பல்வேறு பல்கலைகளில் பணி நியமனங்களுக்கு, பேரம் பேசப்படுவதாக புகார்கள் எழுந்தன. அதேபோல், பல்கலைகளில் நிதி பற்றாக்குறையும் ஏற்பட்டது. 'நிதி பற்றாக்குறை நிலவுவதால், சம்பளம் வழங்க, கூடுதல் நிதி ஒதுக்க முடியாது' என, தமிழக அரசின், நிதித்துறை கைவிரித்துள்ளது.எனவே, நிதித்துறையின் அறிவுறுத்தல்படி, ஒவ்வொரு அமைச்சகமும், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைகளில், புதிய பணி நியமனங்களை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக