: 'அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'ஸ்காலர்ஷிப்' வழங்குவதற்கான ஊரக திறனாய்வு தேர்வு, செப்., 23ல் நடக்கும்' என, அரசு தேர்வுத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக, ஊரக பள்ளிகளுக்கு,
தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு முடிவு மற்றும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மேல் படிப்பு உதவி தொகையாக, ஆண்டுதோறும், 1,000 ரூபாய் வழங்கப்படும்.ஒவ்வொரு வருவாய் மாவட்டத்துக்கும், தலா, 50, மாணவ - மாணவியர் தேர்வு செய்யப்படுவர். இந்த தேர்விற்கு, நகராட்சி, மாநகராட்சி பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாது. நடப்பு கல்வி ஆண்டுக்கான, ஊரக திறனாய்வு தேர்வு, செப்., 23 காலை, 10:00 முதல், பிற்பகல், 12:30 மணி வரை நடைபெறும்.இந்த தேர்வுக்கு, அந்தந்த பள்ளி வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம், ௧ லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது. இதற்காக, வருவாய் துறையிடம் இருந்து, வருமான சான்றிதழ் பெற வேண்டும். இந்த தேர்வுக்கு, சேவை கட்டணத்துடன், 10 ரூபாய் கட்டணத்தை, பள்ளி தலைமை ஆசிரியரிடம் தர வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக