சிவங்கை மாவட்டம், திருவேலங்குடியில், 'அரசு உறுதியளித்தபடி பள்ளி துவங்காததால், 73 மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதில்லை' என கிராம கூட்டத்தில் முடிவு செய்து உள்ளனர். சிவகங்கை
அருகேகவுரிப்பட்டி ஊராட்சி திருவேலங்குடி, காரம்பட்டி கிராமத்தில், 400 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை படிக்கும், 47 குழந்தைகள் இருந்தும் பள்ளி இல்லை.அவர்கள் காளையார்மங்கலம், ஒக்கூர், நாட்டரசன்கோட்டை, மேலக்காடு கிராமங்களில் படிக்கின்றனர்.தேவையான மாணவர்கள் இருந்தும், எம்.எல்.ஏ., சிபாரிசு இல்லாததால் பள்ளி திறக்கவில்லை. இதுகுறித்து, 2017 ஆக., 4ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அந்த ஆண்டே புதிய பள்ளியை துவங்க பள்ளிக்கல்விச் செயலர் உத்தரவிட்டார்.தொடர்ந்து சிவகங்கை கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, 'அங்கன்வாடி மைய கட்டடத்தில் பள்ளி துவங்கப்படும்' என, தெரிவித்தனர். ஓராண்டாகியும் நடவடிக்கை இல்லை. இதனால் 'வெளியூர்களில் பயிலும், 47 குழந்தைகள், அவர்களுக்கு ஆதர வாக, 6 முதல், 9ம் வகுப்பு வரை பயிலும், 26 குழந்தைகளை இன்று முதல் பள்ளிக்கு அனுப்புவதில்லை' என கிராமக் கூட்டத்தில் முடிவு செய்தனர்.கிராம மக்கள் கூறுகையில், 'கடந்த ஆண்டே பள்ளி திறப்பதாக அதிகாரிகள் கூறினர். அனுமதி கிடைக்க தாமதமானதால் நடப்பாண்டில் கண்டிப்பாக திறப்பதாக கூறினர். 'உறுதியளித்தப்படி திறக்காததால், மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்' என்றனர்.
கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'திருவேலங்குடியில் புதிய பள்ளி துவங்குவது குறித்து ஆய்வு அறிக்கை அனுப்பினோம். அரசிடம் இருந்து அறிவிப்பு வரவில்லை' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக