சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் நகரம்பட்டி அரசு
நடுநிலைப் பள்ளியை கிராம மக்கள் 'டிஜிட்டல்' மயமாக்கினர்.
இப்பள்ளி 1954 ல் துவங்கப்பட்டது. மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக
குறைந்து 2 ஆண்டுகளுக்கு முன், 28 பேர் மட்டுமே இருந்தனர். பள்ளி
கட்டடங்கள் மோசமாக இருந்ததால் பலர் தங்களது குழந்தைகளை
பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர். முன்னாள் மாணவர்கள், கிராம மக்கள்
இணைந்து கட்டடங்களை சீரமைத்து, மின்வசதி ஏற்படுத்தி கொடுத்தனர்.
மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக உயர துவங்கியது. தற்போது
நகரம்பட்டி, அம்மன்பட்டி, வீழனேரி, அழகாபுரி, ராமலங்கபுரம்
கிராமங்களைச் சேர்ந்த 45 பேர் படிக்கின்றனர். ஆறு ஆசிரியர்கள்
பணிபுரிகின்றனர்.
இந்த ஆண்டு 4 லட்சம் ரூபாயில் 'டிஜிட்டல்' வகுப்பை கிராம மக்கள்
இந்த ஆண்டு 4 லட்சம் ரூபாயில் 'டிஜிட்டல்' வகுப்பை கிராம மக்கள்
ஏற்படுத்தி கொடுத்தனர். அதில் 'ஆன்லைனில்' இயங்கும் 'ஸ்மார்ட்
போர்டு,' கணினி, இருக்கைகள் போன்ற வசதிகள் உள்ளன.
தலைமைஆசிரியர் வள்ளியம்மை கூறியதாவது: 'ஸ்மார்ட்' வகுப்பில்
வீடியோ, அனிமேஷன் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. யோகா வகுப்பும்
நடத்துகிறோம். ஆங்கிலவழி கல்வியும் துவங்கியுள்ளோம். கிராம மக்கள்
ஒத்துழைப்பால் மாணவர்கள் குறைவது தடுக்கப்பட்டது, என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக