அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுநர் இடமாறுதல் கலந்தாய்வு அறிவிப்பிற்கு தடை கோரிய வழக்கில்,'இவ்விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
கரூர் தாந்தோணிமலை வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் வரதராஜ் உட்பட சிலர் தாக்கல் செய்த மனு:அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் மாநில மற்றும் மாவட்ட திட்ட அலுவலகங்கள், வட்டார மற்றும் தொகுப்பு வள மையங்களில் பணிபுரியும் 3890 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களில், தற்போதைய மாநில காலிப்பணியிடங்களில் 15 சதவீதத்தை பொதுவான காலிப் பணியிடங்களாக ஒதுக்க வேண்டும்.
பொது கலந்தாய்வு மூலம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து மாவட்டங்களுக்கும் மாறுதல் வழங்கி, பொதுக் கலந்தாய்வு நடத்த வேண்டும் என ஆக.,9ல் பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு 2014 முதல் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தவில்லை. 6230 ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்ளனர். அவர்களுக்கும் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்.
கலந்தாய்விற்கு பின் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு புதிய ஆசிரியர் பயிற்றுநர்களை நியமிக்க வேண்டும். பொதுக்கலந்தாய்வு அறிவிப்பிற்கு தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.நீதிபதி வி.பார்த்திபன்,'இவ்விவகாரத்தில் தற்போது எந்த நிலை உள்ளதோ, அதே நிலை தொடர வேண்டும். பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி, செப்.,6 க்கு ஒத்திவைக்கப்படுகிறது,' என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக