லேபிள்கள்

19.8.18

ஆசிரியர்கள் உரிய அனுமதியின்றி மேற்படிப்பு படிக்கக்கூடாது:-சென்னை உயர்நீதிமன்றம்!

கல்லூரிகளில் முழுநேர ஆசிரியராகப் பணியாற்றும்போது, முழு நேர மேற்படிப்பு படிக்கும் நடைமுறை கண்டிக்கத்தக்கது
என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் முழு நேர ஆசிரியராகப் பணியாற்றும் சண்முகவள்ளி என்பவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முழு நேர மேற்படிப்பு படித்து வந்துள்ளார். இதற்காக, அவர் சம்பந்தப்பட்ட கல்லூரியின் அனுமதியைப் பெறவில்லை என்று புகார் எழுந்தது. இந்த நிலையில், சண்முகவள்ளியின் தேர்வுகளை ரத்து செய்து, அண்ணா பல்கலைக் கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உத்தரவிட்டார்.



இந்த உத்தரவை எதிர்த்து சண்முகவள்ளி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு இன்று (ஆகஸ்ட் 18) நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “கல்லூரிகளின் அனுமதியின்றி ஆசிரியர்கள் யாரும் முழு நேர மேற்படிப்பைப் படிக்கவில்லை என்பதை பல்கலைக்கழகம் உறுதி செய்ய வேண்டும்.

ஆசிரியராகப் பணியாற்றும் போதே, மேற்படிப்பு படிக்கும் நடைமுறை கண்டிக்கத்தக்கது” என்று விசாரணையின் போது தெரிவித்தார் நீதிபதி. அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டாளரின் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக