லேபிள்கள்

20.8.18

கலை கல்லூரிகளில் மொபைலுக்கு தடை

 தமிழகம் முழுவதும் உள்ள, கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு வகை கல்லுாரிகளிலும், புதிதாக சேர்ந்த
மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கி, நடந்து வருகின்றன. இன்ஜினியரிங் மாணவர்களுக்கு மட்டும், அடுத்த வாரம் வகுப்புகள் துவங்குகின்றன.இந்நிலையில், அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லுாரிகளில், வகுப்பு நேரத்தில், மாணவர்கள் மொபைல் போன்களை பயன்படுத்துவதால், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.மாணவர்கள் பலர், மொபைல் போன்கள் வாயிலாக கல்லுாரி வளாகத்தை புகைப்படம் எடுப்பது, வகுப்பறைகளில், மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களை புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். சில மாணவர்கள் வகுப்பு நேரத்தில், 'வாட்ஸ் ஆப்' மற்றும், 'பேஸ் புக்' பார்ப்பது, சினிமா பார்ப்பது என, மற்ற மாணவர்களுக்கு இடையூறு செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன. அதனால், பேராசிரியைகள், மாணவியர் மற்றும் பெண் ஊழியர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே,வகுப்பறைகளிலும், கல்லுாரி வளாகத்திலும், மொபைல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், படிப்படியாக மற்ற மாவட்டங்களிலும், இந்தத் தடையை அமல்படுத்த, கல்லுாரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுஉள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக