10ம் வகுப்பு தேர்வில்: இரு பாடங்களில் 37 ஆயிரம் பேர் தோல்வி
பத்தாம் வகுப்பு தேர்வில், ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 847 மாணவர்கள், தோல்வி அடைந்து உள்ளனர். இவர்களில், இரு பாடங்களில் மட்டும், 37,628 பேர், தோல்வி அடைந்து உள்ளனர்.
நேற்று முன்தினம், 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது. தேர்வெழுதிய,
10 லட்சத்து, 51 ஆயிரத்து, 62 மாணவர்களில், 9 லட்சத்து 35 ஆயிரத்து, 215 மாணவர்கள், தேர்ச்சி பெற்றனர். அதிகபட்சமாக, இந்த ஆண்டு, 89 சதவீத மாணவர்கள், தேர்ச்சி பெற்றனர். 11 சதவீத மாணவர்கள் மட்டுமே, தோல்வி அடைந்தனர்.
ஐந்து பாடங்களிலும் சேர்த்து, ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 847 மாணவர்கள், தோல்வி அடைந்து உள்ளனர். இவர்களில், அதிகபட்சமாக,
இரு பாடங்களில், 37,628 பேர், தோல்வி அடைந்து உள்ளனர். ஒரு பாடத்தில், 31,481 பேரும், மூன்று பாடங்களில், 26,948 பேரும், தோல்வி அடைந்து உள்ளனர்.
நான்கு பாடங்களில், 14,675 பேரும், ஐந்து பாடங்களிலும், 5,115 மாணவர்களும்,
தோல்வி அடைந்து உள்ளனர். தோல்வி அடைந்துள்ள, 1.15 லட்சம் மாணவர்களும், உடனடித் தேர்வை எழுதலாம். உடனடித் தேர்வில் தேர்ச்சி பெற்றால், நடப்பு கல்வி ஆண்டிலேயே, பிளஸ் 1 வகுப்பில் சேரலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக