விருப்பக் கடிதம் அளிக்காத PG Panel இல் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வில் செல்ல இயலாது
01.01.2013 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வில் செல்ல தகுதிவாய்ந்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அது குறித்த செயல்முறைகளில் பத்தி எண்.3ல் பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வில் செல்ல விருப்பம் தெரிவிக்கிறாரா என்பதற்கான விருப்பக் கடிதத்தினை சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
அவ்வாறு உடனனடியாக விருப்ப கடிதம் வழங்காத பட்டியலில் உள்ள அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் முதுகலை ஆசிரியர்களாகவே பதவி உயர்வில் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார் என கருதப்பட்டு அவர்களுக்கு முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படும்.
அவ்வாறு விருப்பக் கடிதம் அளிக்காத ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியராகப் பதவி உயர்வில் சென்றால் தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலை கல்விப் பணி விதி 9(க்ஷ)ன்படி, பட்டதாரி ஆசிரியர் பதவியில் மீள் உரிமை ரத்தாகும் என்றும் மீண்டும் பட்டதாரி ஆசிரியர் பணியினைக் கணக்கில் கொண்டு அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வில் செல்ல இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக