மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளோருக்கு, நாளை, ரேண்டம் எண் வெளியிடப்படுகிறது.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, இந்த ஆண்டு, 29 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில், "கட்-ஆப்&' மதிப்பெண், பிறந்த தேதி, நான்காவது பாட மதிப்பெண் ஆகியவை, ஒன்றாக இருக்கும் பட்சத்தில், அவர்களில் யாரை, முதலில் கலந்தாய்விற்கு என்பதற்காக, ரேண்டம் எண் வழங்கப்படுகிறது.
பத்து இலக்க எண்ணான இந்த, ரேண்டம் எண், யாருக்கு அதிக மதிப்புடன் இருக்கிறதோ, அந்த மாணவர், முதலாவதாக கலந்தாய்விற்கு அழைப்படுவர். மருத்துவ படிப்பு விண்ணப்பதாரர்களுக்கான, ரேண்டம் எண், நாளை மதியம் வெளியிடப்படுகிறது.
ஆண்டுதோறும், பொறியியல் படிப்பு விண்ணப்பதாரர்களை ஒப்பிடும் போது, மருத்துவ படிப்பு விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்பதால், மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வில், ரேண்டம் எண் அரிதாகவே பயன்படுகிறது என, மருத்துவக் கல்வி இயக்க வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக