லேபிள்கள்

4.6.13

அரசு பெண்கள் பள்ளியில் இனி பெண் ஆசிரியர்களே நியமனம்

அரசு பெண்கள் பள்ளியில், இனி, தலைமை ஆசிரியர் பணியிடம் முதல், பாட ஆசிரியர்கள் வரை, அனைத்து இடங்களிலும், ஆசிரியைகள் மட்டுமே நியமனம் செய்யப்படுவர் என, தமிழக அரசு, அதிரடியாக அறிவித்துள்ளது. ஆண்கள் பள்ளியில், ஆண் ஆசிரியர்கள் மட்டுமே இருப்பர். இருபாலர் பயிலும் பள்ளி என்றால், ஆசிரியைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பள்ளிகளில், பாலியல் பலாத்கார சம்பவங்களை தடுக்க, தமிழக அரசு, அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.அரசு பெண்கள் பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பெண்கள் பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பணியிடம் முதல், பாட ஆசிரியர் பணியிடம் வரை, அனைத்து இடங்களிலும், ஆசிரியைகளை மட்டுமே, பணி நியமனம் செய்ய வேண்டும் என, கல்வித்துறைக்கு, தமிழக அரசு த்தரவிட்டுள்ளது. அதேபோல், ஆண்கள் பள்ளியில், ஆண் ஆசிரியர்கள் மட்டும் பணிபுரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழக அரசு தெரிவித்துள்ளது.மாணவர், மாணவியர் என, இரு பாலர் பயிலும் பள்ளிகளாக இருந்தால், அங்கு, ஆசிரியைகளுக்கு, முதலில், முன்னுரிமை தர வேண்டும் எனவும், தமிழக அரசு, அறிவுறுத்தி உள்ளது.


 ஆசிரியரை பணி நியமனம் செய்யும்போதோ, பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தும் போதோ, புதிய உத்தரவை அமல்படுத்த வேண்டும் என, தமிழக அரசு, தெரிவித்துள்ளது. எனவே, ஏற்கனவே, பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு, தற்போது, எந்த பாதிப்பும் வராது. இனிமேல், புதிதாக பணி நியமனம் செய்யும்போது, இனி ஆசிரியைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக