லேபிள்கள்

19.6.13

மருத்துவ படிப்பிற்கான திருத்திய தரவரிசை பட்டியல் வெளியீடு


          மருத்துவ படிப்பு விண்ணப்பதாரர்களில், 120 பேரின் தரவரிசை மாறியுள்ளதாக, திருத்திய தரவரிசை பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
          பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களில், 5,726 பேர், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில், தாங்கள் பெற்ற மதிப்பெண்களை மறுகூட்டல் செய்யவும், விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்யவும் விண்ணப்பித்திருந்தனர்.

         இவர்களில், 3,291 மாணவர்களின் மதிப்பெண்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக, பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவால், மருத்துவ தரவரிசை பட்டியலில், 120 பேருக்கு மட்டும், அவர்களின் தரவரிசையில், மாற்றம் ஏற்பட்டுள்ளதாக, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., ஆகிய படிப்புகளுக்கான திருத்திய தரவரிசை பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

         விண்ணப்பதாரர்கள், கூடுதல் விவரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் பெறலாம். முதுநிலை மருத்துவ படிப்பிற்கான திருத்திய தரவரிசை பட்டியல் விவரங்களையும், விண்ணப்பதாரர்கள், குறிப்பிட்ட இணையதளத்தில் பெறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக