லேபிள்கள்

13.8.13

. இரு அதிகாரிகளின் பணியிட மாற்றம், டி.இ.டி., தேர்வுக்குப் பின் அமலுக்கு வரும் என, பள்ளிக்கல்வித் துறை செயலர் தகவல்.

வரும், 17, 18ம் தேதிகளில், டி..டி., தேர்வு நடக்கிறது. இதை, ஏழு லட்சம் பேர் எழுதுகின்றனர். இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளை கவனிக்கும் பணிகளில், டி.ஆர்.பி., அதிகாரிகள் மட்டுமில்லாமல், கல்வித் துறை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



இந்நிலையில், டி.ஆர்.பி.,யில் உறுப்பினர்களாக பணியாற்றி வரும், வர்மா மற்றும் உமா, முறையே, மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தேர்வுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். டி..டி., தேர்வுப் பணிகளில், இரு அதிகாரிகளும் ஈடுபட்டிருப்பதால், திடீரென, பணியிட மாற்றம் செய்ய வேண்டாம் எனவும், டி..டி., தேர்வுக்குப் பின், இவர்கள், புதிய துறையில் சேரலாம் எனவும், பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதா தெரிவித்துள்ளார். எனவே, இவர்கள் இருவர் தவிர, மற்ற, 10 இணை இயக்குனர்களும், உடனடியாக, புதிய பணியிடங்களில் சேர முடிவு எடுத்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக