லேபிள்கள்

25.12.13

1ம் வகுப்பு மாணவரின் தந்தைக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க பள்ளி நிர்வாகத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

ஒன்றாம் வகுப்பு மாணவரின் தந்தைக்கு, 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு மற்றும் சேர்க்கை கட்டணத்தை திருப்பி வழங்க வேண்டும் என, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மந்தவெளிபாக்கத்தைச் சேர்ந்தவர், விஜய் ஸ்ரீனிவாசலு. அவர், தன் மகன் ஷரிஷா விஜயை, கடந்த ஆண்டு, மந்தை வெளியில் உள்ள தனியார் பள்ளியில், சேர்க்கை கட்டணம், 39,700 ரூபாய்; நன்கொடை, 50 ஆயிரம் ரூபாய் என, மொத்தம், 89,700 ரூபாய் செலுத்தி, முதல் வகுப்பில் சேர்த்தார். பள்ளி துவங்கும் நேரத்தில், விஜய் ஸ்ரீனி வாசலு, வெளிநாடு செல்ல வேண்டியதாயிற்று

இதனால், மகனுக்கு செலுத்திய கல்வி தொகையை, பள்ளி நிர்வாகத்திடம் திருப்பி கேட்டார். பள்ளி நிர்வாகம் தர மறுத்தது.

இதுகுறித்து, சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில், விஜய் ஸ்ரீனிவாசலு முறையிட்டார். வழக்கை விசாரித்த, நுகர்வோர் கோர்ட் தலைவர் கோபால், உறுப்பினர் தீனதயாளன் ஆகியோர், மாணவரின் தந்தையிடம் பெற்ற, 89,700 ரூபாயை திருப்பி அளிக்க வேண்டும்


அவருக்கு, இழப்பீடாக, 25 ஆயிரமும், மன உளச்சலுக்காக, 5 ஆயிரமும் சேர்ந்து, 30 ஆயிரத்தை பள்ளி நிர்வாகம் வழங்க வேண்டும் என, உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக