பத்தாம்
வகுப்பு படிக்கும்
மாணவர்களுக்கும் செய்முறைத்
தேர்வுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த செய்முறைத்
தேர்வுகள் கடந்த
ஆண்டு நடைமுறைக்கு
கொண்டு வரப்பட்டது.
பள்ளிகளில் பத்தாம்
வகுப்பு படிக்கும்
சுமார் 8 லட்சம்,
மாணவர்கள் செய்முறைத்
தேர்வு எழுத
வேண்டும்.
இவர்கள்
தவிர ஏற்கெனவே
பத்தாம் வகுப்பு
தேர்வு எழுதி
தோல்வி அடைந்து
மீண்டும் தேர்வு
எழுதுவோர், முதல்
முறையாக பத்தாம்
வகுப்பு தேர்வை
தனித் தேர்வர்களாக
எழுதுவோர் ஆகியோரும்
இந்த செய்முறைத்
தேர்வில் கட்டாயம்
பங்கேற்க வேண்டும்.மேற்கண்ட
தனித் தேர்வர்கள்
செய்முறைத் தேர்வு
எழுதுவது எப்படி
என்பது குறித்து
ஏற்கெனவே தேர்வுத்
துறை அறிவித்துள்ளது.
இதன்படி ஒவ்வொரு
மாவட்டத்திலும் குறிப்பிட்ட
இரண்டு மையங்கள்
அமைக்கப்படும். அங்கு
மேற்கண்ட தனித்
தேர்வர்கள் நேரில்
சென்று செய்முறைத்
தேர்வுக்கான பயிற்சி
பெற வேண்டும்.
அப்போது, 5 செய்முறைகளை
ஆசிரியர்கள் செய்து
பயிற்சி அளிப்பார்கள்.
இந்த பயிற்சி
ஜனவரி 2ம்
தேதி முதல்
தொடங்க வேண்டும்
என்று அரசுத்
தேர்வுகள்துறை தெரிவித்துள்ளது.
பத்தாம்
வகுப்பு அறிவியல்
பாடத்தில் எழுத்து
தேர்வுக்கு 75 மதிப்பெண்ணும்,
செய்முறைத் தேர்வுக்கு
25 மதிப்பெண்ணும் ஒதுக்கப்பட்டுள்ளது.
செய்முறைத் தேர்வில்
25க்கு 15 மதிப்பெண்
எடுக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு
பொதுத் தேர்வு
மார்ச் 26ம்
தேதி தொடங்க
உள்ளது. அதற்கு
முன்பாகவே பத்தாம்
வகுப்பு செய்முறைத்
தேர்வுகளை நடத்தி
முடிக்க வேண்டும்
என்று அரசுத்
தேர்வுகள் இயக்ககம்
உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக