2003
ஆண்டு முன்பு வரை 6,7,8 வகுப்புகளில் தொடக்கக் கல்வி துறையிலும், பள்ளி கல்வி துறையிலும்
இடைநிலை ஆசிரியர் பணிபுரிந்து வந்தனர்.
ஆனால்
2003 ஆண்டில் 6,7,8 வகுப்பு இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக
மாற்றப்பட்டு, 2004 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வு மூலம்
தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் தொடக்கக் கல்வி துறையிலும், பள்ளி கல்வி துறையிலும்
பணிநியமனம் செய்யப்பட்டனர்,
ஒரே கல்வித்தகுதியும், ஒரே தேர்வு வாரியம் மூலம்
தேர்வு செய்யப்பட்டு பணிநியமனம் செய்யப்பட்டாலும் பள்ளிக்கல்வித் துறையில் நியமிக்கப்பட்ட
பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலைபட்டதாரி ஆசிரியர் பதவிஉயர்வுக்குரிய PANEL பட்டியலில்
இடம்பெற ஆரம்பித்து விட்டனர்.
ஆனால் தொடக்க கல்வித்துறையில் பணிநியமனம் செய்யப்பட்டு
பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்கள், தன் பணிக்காலம் முழுவதும் பட்டதாரி ஆசிரியராக
பணிபுரிந்து ஒய்வு பெறும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதுபற்றி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின்
மாவட்ட பொறுப்பாளர் கூறுகையில்; தொடக்க கல்வித்துறையில்
நியமனம் செய்யப்பட்டு பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர்
பதவி உயர்வு வழங்க கடந்த 9 ஆண்டுகளாக தமிழக அரசிடம் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
தற்போது
துறை வேறுபாடு கருதாமல் தொடக்க கல்வித் துறையில்
பணியாற்றி வந்த உதவித் தொடக்க கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறையின் உயர்நிலைப்பள்ளித்
தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற அனுமதிக்கப்பட்டது.
அதுபோல துறை வேறுபாடு கருதாமல் தொடக்க கல்வித்துறையில்
பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக