இதற்கு ஒரு உதாரணமாக, சென்ற மாதம் நமது மாநில
பொதுச்செயலாளர் சென்னையில் தொடக்க கல்வி
இயக்குனரை சத்தித்து தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி
ஆசிரியர்களுக்கு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு
வழங்கும் வகையில்
பள்ளிக்கல்வி செயலருக்கு பரிந்துரை செய்யும்படி கோரிக்கை வைத்தார். அப்போது
இயக்குனர் அவர்கள் நீங்கள் மட்டுமே தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி
ஆசிரியர்களுக்கு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க பரிந்துரை செய்ய
கோருகிறீர்கள் தொடக்க கல்வித்துறையில் உள்ள மற்ற சங்கங்களோ, பிற பட்டதாரி ஆசிரியர்
சங்கங்களோ இது பற்றி கோரிக்கை வைப்பதில்லை என நமது பொதுச்செயலரிடம் வினவியுள்ளார்.
அதற்கு நமது பொதுச் செயலாளர், எங்கள் TNGTF மட்டுமே தொடக்க கல்வித்துறையில்
நியமிக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்காக உருவாக்கப்பட்டு அவர்களின் பதவி
உயர்வுக்கு குரல் கொடுக்கும் அமைப்பு என பதில் அளித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக